இந்த பொருட்களை முதலில் தூக்கி வீசுங்கள்… வீட்டில் தரித்திரம் விலகி செல்வம் பெருகும்..!
நம்மில் பலருக்கும் வாஸ்து, அதிர்ஷ்டம் போன்றவற்றின் மீது நம்பிக்கை உண்டு. அதன்படி வீட்டில் உள்ள சில பொருட்களை வெளியே தூக்கி வீசுங்கள். அது உங்கள் வீட்டில் செல்வம் பெருக பெரும் தடையாக இருக்கும்.
வீட்டிலோ வீட்டைச் சுற்றியோ தேன் கூடு இருந்தால் அதை ஆரம்பத்திலேயே அகற்றிவிடுங்கள். அது ஆபத்தானது மட்டுமல்ல. துரதிஷ்டத்தைத் தன் பக்கம் ஈர்க்கவும் செய்யும்.
வீட்டில் சிலந்தி கூடு கட்டியிருந்தால் அது துரதிஷ்டமும் வறுமையும் உண்டாவதற்கான அறிகுறி. அதை முதலில் சுத்தப்படுத்துங்கள்.
வாஸ்துப்படி வீட்டில் உடைந்த கண்ணாடிகளை வைத்திருப்பது வறுமையை உண்டாக்கும். அதோடு உடைந்த கண்ணாடி எதிர்மறை ஆற்றலை வீட்டுக்குள் ஈர்த்துக் கொண்டு வந்துவிடும்.
வீட்டின் சுவரில் ஏதேனும் பிளவுகளோ விரிசல்களோ இருந்தால் அதை உடனடியாக சரிசெய்யுங்கள். இது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச் செய்யும்.
வீட்டில் குழாய் ஒழுகிக் கொண்டிருந்தால் அதனால் தண்ணீர் மட்டும் வீணாகாது. வீட்டிலுள்ள நேர்மறை சக்திகளும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். அதனால் ஒழுகும் குழாய்கள் இருந்தால் உடனடியாக சரிசெய்யப் பாருங்கள்.
வீட்டின் மொட்டை மாடியில் பழைய குப்பைகளைப் போட்டு வைக்காதீர்கள்.
வீட்டின் பூஜையறையில் கடவுள் படங்களை மலர்களால் அலங்கரிப்போம். அது காய்ந்தவுடன் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

0 comments:
Post a Comment